"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Reptile Info Tech

வணக்கம். Reptile Info Tech .com என்னும் அறிவியல் சார்ந்த இணைய தளத்திற்கு வருகைபுரிந்த அன்பு நெஞ்சங்களுக்கு முதலில் எங்களுடைய நிறுவனமான “நாஞ்சில் சிவா பதிப்பகம்” – Nanjil Siva Publication சார்பாக அன்பு கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

“Reptile Info Tech” என்பது “ஊர்வன” வகையை சேர்ந்த விலங்குகளைப்பற்றிய தகவல்களைத் தரும் அறிவியல் சார்ந்த இணையதளம் ஆகும்.

reptileinfotech banner-logo

‘ரெப்டிலியா’ (Reptilia) எனும் வகுப்பைச் சேர்ந்த ஊர்வன என்பவை முதுகெலும்பு கொண்ட விலங்குகள் ஆகும். அதுமட்டுமல்லாது, இதனுடைய மேற்புற உடலானது செதில்கள் அல்லது கடினமான தோல்கள் அல்லது கடின ஓடுகளால் மூடப்பட்டிருக்கும்.

ஊர்ந்து செல்வனவெல்லாம் “ஊர்வன” (Reptile) என்னும் வரையறைக்குள் வருவதில்லை. “ஊர்வன” என்னும் வரையறைக்குள் வரவேண்டுமென்றால் அவைகள் முதுகெலும்பினை பெற்றிருக்கவேண்டும்.

எடுத்துக்காட்டாக, சொல்லவேண்டும் என்றால் புழுக்கள், பூரான் போன்ற சிறிய உயிரினங்களை குறிப்பிடலாம்.

ஊர்ந்து செல்லும் “புழுக்கள்” முதுகெலும்பற்றவை என்பதால் இவைகள் ஊர்வன வகையைச் சேர்ந்தவை அல்ல.

Reptile Info Tech - Vadivelu
Reptile Info Tech - Spineless human worms

ஊர்வன பொதுவாக நான்கு பெரும் பிரிவுகளாக (Categories) வகைப்படுத்தப்பட்டுள்ளன… அவையாவன:

  • ஸ்குவாமேட்டா (Squamata): அனைத்துப் பாம்புகளையும், பல்லிகளையும் உள்ளடக்கிய மிகப்பெரிய குழு.
  • டெஸ்டுடினஸ் (Testudines): ஆமைகள் (கடல் ஆமைகள், நில ஆமைகள் மற்றும் நன்னீர் ஆமைகள்)  இவை அனைத்தும் ஒரு சிறப்பான கடினமான ஓட்டைக் கொண்டிருப்பதன் மூலம் தனித்து அறியப்படுகின்றன
  • குரோகோடிலியா (Crocodylia): முதலைகள், அலிகேட்டர்கள், கெய்மன்கள் மற்றும் காரியல்கள்.
  • ரின்கோசெஃபாலியா (Rhynchocephalia):  இவை நியூசிலாந்தைச் சேர்ந்த பல்லியைப் போன்ற தோற்றமுடைய அரிய வகை ஊர்வன ஆகும்.

Reptile Info Tech – Genus and Species

மேலே நான்கு பெரும்பிரிவுகளை (Categories) பார்த்தீர்களல்லவா?!… அந்த ஒவ்வொரு வகைகளிலும் நூற்றுக்கணக்கான “பேரினங்கள்” (Genus) உள்ளன.

நான்காவது பிரிவான “ரின்கோசெக்ஃபாலியா” (Rhynchocephalia) பிரிவில் மட்டும் காலவோட்டத்தில் பெரும்பாலான பேரினங்கள் அழிந்துபோக இப்போது “டுவாடாராக்கள்” ( Tuataras) என்று சொல்லக்கூடிய ஒரேஒரு பேரினம் (Genus) மட்டுமே எஞ்சியிருக்கின்றன. அந்த பேரினத்திலும் ஸ்பெனோடான் (Sphenodon) என்று சொல்லகூடிய ஒரேஒரு “சிற்றினம்” (Species) மட்டுமே உள்ளன. அதுவும் நியூசிலாந்தில் (New Zealand) மட்டுமே காணப்படுகின்றன. அந்தோ பரிதாபம்.

ஊர்வனவற்றில் உள்ள நான்கு பெரும் பிரிவுகளில் (Categories) முதல் மூன்று பிரிவுகளிலும் நூற்றுக்கணக்கான “பேரினங்கள்” (Genus) உள்ளதாக பார்த்தோமல்லவா!… அந்த ஒவ்வொரு பேரினத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் (Species) உள்ளன. இதுவரையில் மொத்தம் 12,000-க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

Type Of Reptiles

இந்த 12,000-க்கும் மேற்பட்ட சிற்றினங்களைப்பற்றி தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆர்வமாக உள்ளது அல்லவா? … கவலை வேண்டாம்… உங்கள் ஆர்வத்தைத் தணிப்பதற்காகவே “Reptile Info Tech” (reptileinfotech.com) என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஊர்வனவற்றின் பரிணாம வரலாறு, உடற்கூறியல் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றிய ஆழமான புரிதலைப்பெற எங்களுடன் இணைந்திருங்கள்.

இங்கு வெளியிடப்படும் அனைத்துக் கட்டுரைகளும் அறிவியல் சார்ந்தவை என்பதால் அனைத்து ஆவணங்களும் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றன.

ஆகவே, ஊர்வன பற்றிய விரிவான அறிவைப்பெற எங்களுடன் இணைந்திருங்கள்.

இந்தத் தளத்திற்கு வருகை தந்ததற்கு மீண்டும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!